• Jul 25 2025

ஆஸ்கார் விருது வாங்க கழுதையை அழைத்து வந்த பிரபலம்.. நடிகையின் மேல் தடுக்கி விழுந்த கேமேரா மேன்.. விருது விழாவில் நிகழ்ந்த சுவாரஷ்ய சம்பவங்கள் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த 95-ஆவது விருது விழா இனிதே நிறைவடைந்து இருக்கின்றது. இந்நிகழ்வில் இந்த முறை அடி தடி இல்லாமல் ஆட்டம் பாட்டத்துடன் விழா அரங்கேறியது பலரையும் மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. அதுமட்டுமல்லாது இங்கு பல சுவாரஷ்ய சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அதுகுறித்துப் பார்ப்போம்.

அந்தவகையில் போலாந்து நாட்டுப் படமான Eo என்கிற படத்தில் கழுதை தான் மெயில் லீடாகவே நடித்திருந்த நிலையில், அந்த படம் ஆஸ்கர் நாமினேஷனில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான போட்டியில் இடம்பெற்று வெற்றியையும் ஈட்டி இருந்தது. இந்நிலையில், அந்த கழுதையுடன் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் ஆஸ்கர் மேடையில் நின்று கொண்டு பேசிய பேச்சு ஆனது பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தி இருக்கின்றது.


அதேபோன்று ஆஸ்கார் விருது விழாவில் ஏராளமான பிரபலங்கள் ரெட் கார்ப்பெட்டில் கலந்து கொண்ட நிலையில், போட்டோக்களை எடுத்து வந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் திடீரென எதிர்பாராமல் தடுக்கி விழுந்துள்ளார். அதை பார்த்த பிரபல ஹாலிவுட் நடிகை லேடி காகா உடனடியாக ஓடி வந்து, உங்களுக்கு எதுவும் ஆனதா? என அக்கறையுடன் அவரிடம் விசாரித்தார். அதற்கு அந்த புகைப்படக் கலைஞர் எதுவும் ஆகவில்லை என நன்றி கூறிய காட்சிகள் அடங்கிய வீடியோவும் தீயாக பரவி வருகின்றது.


அதுமட்டுமல்லாது ஆஸ்கார் மேடையில் முதன் முறையாக ஏறிய இந்திய நடிகை தீபிகா படுகோன் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலின் உடைய பர்ஃபார்மன்ஸ் வருவதற்கு முன்னதாக அது தொடர்பாக பேசிய பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றது. இதில் தீபிகா படுகோன் ஒவ்வொரு வார்த்தை பேசவும் ஹாலிவுட் பிரபலங்கள் உற்சாகமாக கத்தியிருந்தனர். இதனால் அவர் அடிக்கடி தனது பேச்சையே நிறுத்தி நிறுத்தி பேசியது ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement