• Jul 24 2025

அழகில் அக்கா ஷாலினியையே மிஞ்சிய தங்கை ஷாம்லி... வைரலாகும் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்ஷத்திரமாக இருந்தவர் தான் ஷாலினி. இவரின் உடன் பிறந்த சகோதரி தான் நடிகை ஷாம்லி. இவர் டைரக்டர் மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.


மேலும் இவர் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய, மாநில அரசு விருதுகளை பெற்றவர் பேபி ஷாம்லி. குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்த அவர், குமரியான பின்பு தனது அக்காவின் கணவர் அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’ மற்றும் ‘ஒய்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்று தன் படிப்பைத் தொடர்ந்தார்.


சிறிது காலத்தின் பின்னர் மறுபடியும் நடிக்க வந்தார். அந்தவகையில் நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’ என்ற படத்திலும் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிக்கும் ‘வள்ளியும் தேட்டி புள்ளியும் தேட்டி’ என்ற படத்திலும் ஷாம்லி நடித்திருந்தார்.


இவ்வாறாக படிப்பு, படம் என பிஸியாக இருந்து வரும் இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்க மறப்பதில்லை. அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். 


அந்தவகையில் தற்போதும் ஒரு வீடியோவினை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் செம க்யூட்டாக இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "அழகில் அக்கா ஷாலினியை மிஞ்சி விட்டார்" எனக் கூறி வருகின்றனர். 

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement