• Jul 26 2025

வெளியேறப் போவது யாரு... கண்ணீர் கலந்த முகத்துடன் ஆயிஷா... பல திருப்பங்களுடன் வெளிவந்த ப்ரோமோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது ஆரம்பமாகி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவாறு சென்று கொண்டு இருக்கின்றது.அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்களின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு சம்பவங்களும் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக கமலின் எபிசோட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களோ ஏராளம். அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோவில் கோபத்துடன் போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றார் கமல்.

அதாவது "30நாள் ஆகிடுச்சு. ஒரு டாஸ்க் இற்கு கூப்பிட்டால் லேற்றாக வருகுறீர்கள்.இவங்கள் எல்லாம் என்ன செய்திடப்போறாங்க என்று எண்ணுகிற அலட்சியம்" எனக்கூறிப் போட்டியாளர்களைத் திட்டி இருந்தார்.


இதனைத் தொடர்ந்து தற்போது 3ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் இந்தப் போட்டியில் இருந்து யார் வெளியேறப் போகிறார் என்பது குறித்துப் பேசி இருக்கின்றார். அதில் ரச்சிதா "ஷெரினா தான் வெளியில் போவார்" எனக் கூறுகின்றார். அடுத்து adk ஆயிஷா ஷேவ் ஆகுவார் எனக் கூறுகின்றார். 

ஆனால் அதுபோன்று ஆயிஷாவோ தான் வெளியில் போக ஆசைப் படுவதாக கூறுகின்றார். அதுமட்டுமல்லாது கமல் சார் கார்ட் ஐ எடுத்துக் காட்டும் போது ஆயிஷாவின் முகமோ கண்ணீர் கலந்த தோற்றத்திற்கு மாறுகின்றது. 

இதனால் இந்த வாரம் ஷெரினா, ஆயிஷா ஆகியோரில் யார் வெளியாகப் போகின்றாரோ என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement