• Jul 24 2025

கயல் சீரியல் பிரபலங்களின் சம்பள விபரம் இதோ... அடேங்கப்பா அதிகம் இவருக்குத் தானா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'கயல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னணி வகித்து வருகின்றது. அதாவது சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இதில் நடித்து வருகின்றார்கள். 


அதாவது கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே இந்த சீரியலின் கதை நகர்கிறது. தன் தங்கையின் திருமணத்தை ஏற்பாடு செய்வது, பணியிட தொல்லைகள் என பல தடைகளை அவள் வாழ்க்கையில் சந்திக்கிறாள். கயல் எப்படி எல்லா தடைகளையும் தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதே இதன் மையக் கதையாக அமைந்துள்ளது.


அந்தவகையில் 530 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் இப்போது நாயகன-நாயகியின் திருமண காட்சிகள் எல்லாம் வந்து சீரியல் அதிரடித் திருப்பத்துடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விபரம் வெளியாகி இருக்கின்றது.

சைத்ரா ரெட்டி- ரூ. 25 ஆயிரம்

சஞ்சீவ்- ரூ. 15 முதல் 20 ஆயிரம்

தேவி- ரூ. 6 முதல் 8 ஆயிரம்

விக்னேஷ்- ரூ. 12 முதல் 14 ஆயிரம்

காமாட்சி- ரூ. 10 முதல் 12 ஆயிரம்

மற்ற நடிகர்கள்- ரூ. 10 ஆயிரத்திற்கு கீழ்

என வாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement