• Jul 26 2025

தற்கொலைக்கு சில மணி நேரத்திற்கு முன் நடிகை வெளியிட்ட வீடியோ இதோ...கண்கலங்கி அழும் குடும்பத்தினர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரைப் பிரபலங்களின் தற்கொலைகள் தொடர்கதையாகி விட்டது. தற்போது பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா தூபே ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி ரசிகர்களுக்கு பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டிக்டாக், இன்ஸ்டாகிராம் மூலமாக பிரபலம் ஆன அவர் சினிமாவில் நுழைந்து நடிகையாகவும் ஜொலித்து வந்தார்.

அகன்ஷா தூபே-க்கு 25 வயது மட்டுமே ஆகும் நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

அத்தோடு அவர் வாரணாசிக்கு ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்று இருக்கும் நிலையில், ஷூட்டிங் முடிந்து ஹோட்டல் அறைக்கு சென்று இருக்கிறார்.


அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எனினும் தற்கொலைக்கு சில மணி நேரங்கள் முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் தனது நடன திறமையை காட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement