• Jul 24 2025

அச்சு அசல் ஜெயம் ரவியைப் போலவே இருக்கும் அவரின் 2ஆவது மகன்... வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் மட்டுமன்றி அழகிலும் மயங்காதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு இவரிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 


இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஆனது இவருக்கு சிறந்த பாராட்டையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுக் கொடுத்தது. இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்ததாக 'அகிலன், சைரன், இறைவன்' என பல படங்கள் இவரின் கை வசம் உள்ளன. 


நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு ஆரத்தி என்பவரை பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்குத் தற்போது இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் பெயர் ஆரவ். இவர் தனது தந்தை ஜெயம் ரவியுடன் இணைந்து 'டிக் டிக் டிக்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.


மேலும் ஜெயம் ரவியின் குடும்பப் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதில் ஜெயம் ரவியின் இரண்டாவது மகனை பார்த்த பலரும், அச்சு அசல் ஜெயம் ரவி சிறு வயதில் எப்படி இருந்தாரோ அதே போலவே இருக்கிறார் அயான் ரவி என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..!


Advertisement

Advertisement