• Jul 24 2025

அத்துமீறி பிரியங்காவின் உடலில் கை வைத்த ராமர்.. கடுப்பான ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நிகழ்ச்சிகளுக்கே பேர் போனவர்கள் என்றால் அது பிரியங்கா மற்றும் மாகாபா தான். இவர்கள் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளில் எப்போதுமே காமெடிக்கும், சிரிப்பிற்கும் பஞ்சம் இருப்பதில்லை. 


அவ்வாறான ஒரு நிகழ்ச்சி தான் Oo Solriya Oo Oohm Solriya. மற்ற நிகழ்ச்சிகளை போலவே இந்த நிகழ்ச்சியும் காமெடி, கலாட்டா என ரசிகர்களை நகைச்சுவைப் பேச்சுக்களால் கொள்ளை கொண்ட வண்ணமே இருக்கின்றது. அந்தவகையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் ராமர், பயில்வான் ரங்கநாதன் மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் பேசிக்கொண்டிருந்த ராமர், திடீரென தொகுப்பாளினி பிரியங்காவின் ஆடையில் கழுத்திற்கு கீழ்ப் பகுதியில் கைவைத்துவிடுவார். இதை பார்த்த அறந்தாங்கி நிஷா உடனடியாக ராமரை தனது கையினால் ஓங்கி அடிப்பார்.


எது எவ்வாறாயினும் ராமரின் இந்த செயலானது ரசிகர்களின் மத்தியில் முகச் சுளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அவர் விளையாட்டாக செய்திருந்தாலும் இந்த விஷயத்தை பார்த்துக் கடுப்பான ரசிகர்கள் "இப்படியொரு தவறான செயலை ராமரிடம் இருந்து கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை" என்று கமெண்டுகளின் வாயிலாக திட்டித் தீர்த்து வருகின்றனர். 


இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement