• Jul 25 2025

சாமத்தில் கதிரவனுடன் இணைந்து குயின்ஷி செய்த வேலை ... வியந்து பார்த்த விக்ரமன்... வைரலாகும் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்ற நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். டிஆர்பி இலும் இந்த நிகழ்ச்சி தான் முன்னிலையில் நிற்கின்றது. இந்த நிகழ்ச்சிக்கு என்று இந்தியா மட்டுமன்றி உலகம் பூராகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.


அந்தவகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசனானது இடம்பெற்று வருகின்றது. 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் மைனா வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி ஆகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாது ஜிபி முத்து, சாந்தி, அசல், ஷெரினா ஆகிய 4 பெரும் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது 17 பேர் மட்டுமே அந்த வீட்டில் எஞ்சி உள்ளனர். இந்நிகச்சியானது தற்போது 5ஆவது வாரத்தை நிறைவு செய்ய காத்திருக்கின்றது.


இங்குள்ள போட்டியாளர்களில் மக்கள் மனதில் அதிகளவில் இடம்பிடித்த போட்டியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர்கள் கதிரவன் மற்றும், குயின்ஷி. இவர்கள் இருவரதும் அமைதி பலருக்கும் பிடித்திருக்கின்றது. இருப்பினும் நாளடைவில் குயின்ஷியும் சக போட்டியாளர்களுடன் சண்டை போடத் தொடங்கி விட்டார்.


இந்நிலையில் இரவு நேரத்தில் கதிரவனுடன் இணைந்து குயின்ஷி காதல் பாடல் ஒன்றினைப் பாடுகின்றார். அதனை விக்ரமன் வியந்து வேடிக்கை பார்க்கின்றார்.

விக்ரமன் மட்டுமல்லாது ரசிகர்கள் பலரும் இவர்களுக்குள் இப்படி ஒரு குரல் வளம் இருக்கின்றதா எனக் கேட்டு ஆச்சர்யமடைந்துள்ளனர். அத்தோடு அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியும் வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement