• Jul 23 2025

நடிகை தேவதர்ஷினியா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

தேவதர்சினி ஒரு தமிழ்த் திரைத்துறை நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாமல் குணச்சித்திர, காமெடி வேடங்களுக்குப் பெயர்போன அவர் அறிமுகமானது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக.


கல்லூரி படிக்கும் காலத்திலேயே.. ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கி பின்னர் 'கனவுகள் இலவசம்'  என்கிற சீரியல் தொடரில் அறிமுகமானார் தேவதர்ஷினி. 


மேலும் இவரது நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமாக அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் வர துவங்கியதால் ஆடிட்டர் ஆக வேண்டும் என்கிற கணவனை தூரம் தள்ளி வைத்து விட்டு, முழு நேர நடிகையாக மாறினார்.


நடிகை தேவதர்ஷினி தன்னுடன் சீரியல் ஒன்றில் இணைந்து நடித்த சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் இருக்கிறார்.


தற்போது தேவதர்ஷினி-சேத்தன் ஆகியோரின் திருமண புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தேவதர்ஷினி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.


Advertisement

Advertisement