• Jul 24 2025

'ஆதிபுருஷ்' படம் எப்படி இருக்கின்றது... படம் பார்த்த ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள வரலாற்றுக் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் தான் 'ஆதிபுருஷ்'. ஓம் ராவத் இயக்கிய இப்படமானது இராமாயணத்தை மையமாக கொண்டமைந்துள்ளது.


இதில் பிரபாஸ் ராமனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சனோன் நடித்து இருக்கிறார். அத்தோடு இராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்த தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில் " இது நாடகப் பகுதியின் அடுத்த கட்டம், அதுமட்டுமல்லாது இசை நன்றாக உள்ளது, அதேபோல் வி.எஃப்.எக்ஸ் நன்றாக இருக்கிறது, ஆனால் குறிப்பாக சில ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் மோசமாக உள்ளது, ஆனால் ஒட்டுமொத்தமாக நன்றாக உணர முடிகின்றது. எங்கள் அன்பர்களுக்கு எங்கள் சார்பாக வாழ்த்துக்கள், இப்படத்தை வெறுப்பாளர்கள் தலைமறைவாக இருப்பது நல்லது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் மற்றொருவர் கூறுகையில் "முதல் பாதி, பிரபாஸ் அறிமுகம், ஹனுமான், ஜானகி கடத்தல் காட்சி அமோகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


இன்னொருவர் கூறுகையில் "இந்துக்களுக்கு என்ன ஒரு உணர்வு. என்ன ஒரு VFX" என ஆச்சர்யத்துடன் பதிவிட்டுள்ளார்.


மேலும் ஒருவர் டைட்டில் கார்ட் நன்றாக இருப்பதாக கூறி இருக்கின்றார்.


அத்தோடு இன்னொருவர் "முதல் பாதி அருமையாக இருக்கிறது. பல எமோஷனல் தருணங்கள் இருக்கின்றன. பிரபாஸின் அறிமுக காட்சி, சபரி காட்சி, பஜரங் காட்சிகள் படத்துக்கு ஹைலைட்டாக இருக்கின்றன. குறிப்பாக பிரபாஸின் ஸ்க்ரீன் பிரஸென்ஸ் மிக அருமையாக இருக்கிறது. சிறந்த இசையோடு நன்றாக இருக்கிறது. ஆனால் விஎஃப் எக்ஸ் மோசமாக உள்ளது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகள். அதில் ஒரு மனிதன் கார்ட்டூன்களுடன் சண்டை போடுவது போல் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.



இவ்வாறாக 'ஆதிபுருஷ' படமானது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement