• Jul 24 2025

திருமணம் எப்போ..? தமன்னா குறித்து மறைமுகமாக விஜய் வர்மாவிடம் கேட்ட நபர்.. அவர் அளித்த க்யூட் ரிப்ளே இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக சமீபகாலமாக ஒரு செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இருப்பினும் இவர்கள் இருவரும் இதுவரை தங்கள் காதலை வெளிப்படையாக உறுதி செய்யவில்லை. 

அதாவது கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தமன்னா, அதில் நடிகர் விஜய் வர்மாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகியமைத் தொடர்ந்து தான் இவ்வாறான காதல் கிசுகிசுக்கள் உலா வந்தன.


இதனையடுத்து இவர்கள் இருவரும் ஜோடியாக ரொமாண்டிக் டின்னர் டேட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மை என ரசிகர்கள் பலரும் முடிவு பண்ணி விட்டார்கள்.

இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற IIFA விருது விழாவில் கோட் சூட் அணிந்துக் கொண்டு செம ராயலாக கலந்து கொண்ட நடிகர் விஜய் வர்மாவிடம் நிரூபர் ஒருவர் "ஏதாவது சந்தோஷமான சுப செய்தி இருக்கா?" என மறைமுகமாக கேள்வி ஒன்றினை எழுப்பினார். 


இந்தக் கேள்வியால் உடனடியாக வெட்கப்பட்டு முகமெல்லாம் சிவந்த விஜய் வர்மா சீக்கிரமே நல்ல படத்தை கொடுக்க முயல்கிறேன் என சொல்லி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார். தமன்னா பற்றித் தான் நிரூபர் கேட்கிறார் என்பதை புரிந்துக் கொண்டே விஜய் வர்மா வெட்கப்பட்டார் என பாலிவுட் வட்டாரங்கள் அவரது பேட்டியை தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement