• Jul 24 2025

ரியல் பொங்கல் வின்னர் அஜித்தா..? விஜய்யா..? ரசிகர்களின் விவாதத்திற்கு கிடைத்த இறுதி முடிவு இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்த வருடம் பொங்கல் தினத்தில் மோதிக்கொண்ட இரண்டு படங்கள் பற்றி நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். இந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் ஹிட்டாக பேசப்பட்டாலும் இரண்டு படங்களில் எது பொங்கல் சூப்பர் ஹிட் வின்னர் மூவி என்ற ஆய்வு இன்றுவரை நடந்து வருகிறது. இதை தொடர்ந்து இரண்டு படங்களின் லாபம் என்ன என்பதைப் பார்ப்போம்.


அந்தவகையில் துணிவு படம் தமிழகத்தில் ரூ 55 கோடி அட்வான்ஸ் முறையில் கொடுத்து ரூ 66 கோடிகள் வரை ஷேர் வந்து, 11 கோடி லாபம் என கூறப்படுகிறது. மேலும் வெளிநாட்டில் 16 கோடிக்கு விற்கப்பட்டு ரூ. 26 கோடி வரை ஷேர் வர, ரூ.10 கோடி வரை லாபத்தை பார்த்துள்ளது.


அதேபோல் வாரிசு தமிழகத்தில் ரூ. 72 கோடிக்கு விற்கப்பட்டு ரூ. 67 கோடி வரை ஷேர் வர, ரூ. 5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் துணிவு கூடவே வந்ததால் வாரிசை ரூ. 60 கோடிக்கு தான் விற்றார்கள் என்ற ஒரு பேச்சும் எழுந்துள்ளது. இதை வைத்து பார்த்தால் ரூ. 7 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் ரூ. 35 கோடிக்கு விற்கப்பட்ட வாரிசு ரூ. 35 கோடி ஷேர் வந்து போட்ட பணத்தை எடுத்துள்ளனர்.


இந்தத் தகவல்களின் அடிப்படையில் லாபத்தை மையமாக வைத்து பார்த்தல் துணிவு படமே சூப்பர் ஹிட் வின்னர் மூவி என்றும் வசூலின் படி பார்த்தால் வாரிசு படமே சூப்பர் ஹிட் வின்னர் மூவி என்றும் கூற முடிகிறது.

Advertisement

Advertisement