• Sep 08 2025

'சந்திரமுகி-2' திரைப்படம் எப்படி இருக்கிறது..? முதல் விமர்சனம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினி ஜோதிகா பிரபு வடிவேலு உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் ஓடி அபார சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.


ஆனால் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் இவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் கங்கனா ராணவத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அத்தோடு இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கின்றார். 

 

இப்படமானது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாக இருப்பதனால் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சந்திரமுகி பாகம் ஒன்றைப் போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெறுமா என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த முதல் விமர்சனம் வெளியாகி இருக்கின்றது. அதாவது 'சந்திரமுகி 2' முழு படத்தையும் பார்த்துவிட்டு கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தவகையில் இப்பதிவில் அவர் "சந்திரமுகி 2 படத்தைப் பார்த்தேன். இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மரணபயத்தில் பல இரவுகள் தூங்காமல் இருப்பார்கள். அதேபோன்று நானும் கடந்த 2 மாதங்களாக இரவு பகலாக தூங்காமல் படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறேன், நண்பர் வித்தியாசாகர் அவர்களே வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்து இருக்கின்றார்.


எனவே கீரவாணி கூறியதை வைத்துப் பார்க்கும் போது சந்திரமுகி-1 ஐப் போலவே சந்திரமுகி-2வும் த்ரில்லிங்கான காட்சிகளுடன் அட்டகாசமாக இருக்கிறது என்பது தெளிவாகின்றது. 

Advertisement

Advertisement