• Jul 23 2025

ஏ.ஆர்.ரகுமானை பின்னுக்குத் தள்ளி.. அரை டஜன் படங்களை தட்டித் தூக்கிய அனிருத்.. முழு லிஸ்ட் இதோ.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அனிருத். இவரின் குரலிற்கு வசியம் ஆகாதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு தன்னுடைய இசையினால் பலரது மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார். 


சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்துக்காக அனிருத் இசையில் தனுஷ் பாடிய 'கொலவெறி' என்ற பாடலின் மூலமாகவே அதிகளவில் கவனம் ஈர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.


ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரகுமானின் சிஷ்யன் ஆக இருந்த அனிருத், தற்போது தமிழ் சினிமாவில் அவருக்கே போட்டியாக விளங்கி வருகிறார். அதாவது ஏ.ஆர்.ரகுமானை விட தற்போது அனிருத்துக்கு தான் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

குறிப்பாக அனிருத் கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. அதில் தமிழில் அவர் இசையமைத்து வரும் படங்களின் லிஸ்ட்டை கேட்டால் நமக்கு தலைசுற்றிவிடும். ஏனெனில் அவர் கைவசம் உள்ள அத்தனை படங்களும் முன்னணி நடிகர்களின் படங்கள் தான்.


அந்தவகையில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.

இப்படங்களை தவிர அஜித்தின் 'ஏகே 62' மற்றும் விஜய்யின் 'தளபதி 67' படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறு தமிழ் சினிமா நிலவரம் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளார் அனிருத். 


இப்படத்தின் வாயிலாக இயக்குநர் அட்லீ உடன் முதன்முறையாக கூட்டணி ஒன்றினை அமைத்துள்ளார் அனிருத். அதுமட்டுமல்லாது டோலிவுட்டில் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் என்.டி.ஆர்.30 படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்து வருகின்றார்.

இவ்வாறாக கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து சினிமாவையும் தன்னுடைய இசையால் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றார் அனிருத்.

Advertisement

Advertisement