• Aug 25 2025

ஆள் அடையாளமே தெரியாதளவிற்கு வளர்ந்து நிற்கும்.. மகாலட்சுமியின் முதல் மகன்... சமீபத்தியப் புகைப்படம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளினியும், நடிகையுமான விஜே மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரனை திடீரென திருமணம் செய்து கொண்டார். 

அந்தவகையில் இவர்கள் இருவரது திருமணமும் செப்டம்பர் 1-ஆம் தேதி திருப்பதியில் மிகவும் எளிமையாக இருவரின் குடும்பத்தினர் முன்னிலையில் இடம்பெற்றது


ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி திருமணம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வந்தனர். ஆனால் இவ்வாறான விமர்சனங்களுக்கு இந்தத் தம்பதியினர் செவி சாய்க்காது தங்களது வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் மகாலட்சுமி சீரியல்களில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அவற்றில் விளம்பரத்திற்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார்.


இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மகாலட்சுமியின் முதல் கணவரின் மகன் சச்சினுக்கு பிறந்த நாள் கொண்டாடி கேக் வெட்டும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் மகாலட்சுமி. இதைப் பார்த்த ரசிகர்கள் "உங்கள் மகன் ரொம்ப நன்றாக வளர்ந்து விட்டார்" எனக் கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement