• Jul 25 2025

மாட்டிக்கிட்ட அசீம்... முரடர் எனக் கூறி வெளுத்து வாங்கத் தயாரான கமல்.. மாஸாக வெளிவந்த ப்ரோமோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அத்தோடு  கடந்த வாரம் ஜனனி வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் தனலட்சுமி வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் ராங்கிங் டாஸ்க் பற்றிக் கமல் பேசுகின்றார்.


அதாவது "ராங்கிக் டாஸ்க் என்பது சீட்டுப் பிடிப்பது போல் அல்ல, அது திறமை சம்மந்தப்பட்டது, அதை அவர்கள் புரிந்து கொண்டது போல் தெரியவில்லை, எதிர்பாராத மன்னர்கள் இருப்பது போல் எதிர்பாராத முரடர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்" எனக் கமல் கூறுகின்றார்.

மேலும் தன்மானம், சுயமரியாதை உள்ளவர்கள் மற்றவர்களை அவமரியாதை செய்வதற்கு முன்னால் சற்றேனும் யோசிப்பார்கள், அதே அவமரியாதையை பதிலுக்கு அவர்கள் செய்து விட்டால்..., இவர் யோசித்ததாக தெரியவில்லை, இவருடன் பேசித்தான் ஆக வேண்டும்" எனக் கூறுகின்றார் கமல். கமல் ஒளிவு மறைவாக இதில் அசீமையே சுட்டிக் காட்டுகின்றார்.

இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement