• Jul 25 2025

"லூசாடி நீ"... மோதலுடன் ஆரம்பமான ரியா விஸ்வநாதன் நடிக்கும் 'சண்டைக்கோழி' சீரியல்.. ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரியா விஸ்வநாதன். இந்த சீரியலில் இருந்து இவர் திடீரென வெளியேறிய நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சண்டைக்கோழி என பெயரிடப்பட்டுள்ள சீரியலில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.


இந்த நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்தவகையில் பணக்கார குடும்பத்தை சேர்ந்த சிடுமூஞ்சி பையன் விக்ரம் ( நியாஸ் ) நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாலியான பொண்ணு மகா ( ரியா ) ஆகியோரின் முதல் சந்திப்பே மோதலில் தொடங்குகிறது.

அந்தவகையில் இவர்கள் இருவரும் ஒரு பஸ் ஸ்டாப்பிற்கு வர அந்த சமயம் மழை வர மகா மழையில் ஆட்டம் போட்டு தனது துப்பட்டாவை தூக்கி வீச அது விக்ரம் முகத்தில் போய் விழுகிறது. இதனால் அவன் ஹேய் லூசாடி நீ, துப்பட்டாவை முகத்துலயா வீசுவ என கோபப்பட மகா யார் லூசு? நீ லூசு, உன் அப்பா லூசு, உன் அம்மா லூசு, உன் தங்கச்சி லூசு என திட்டிக்கிட்டே போக விக்ரம் என் அம்மா லூசா என சண்டையிட அடுத்த ஷாட்டில் இருவரும் மணக்கோலத்தில் உட்கார்ந்திருக்கின்றனர்.


இவ்வாறாக சண்டைக்கோழிகளாக இருந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தது எப்படி? இனி இவர்கள் வாழ்க்கையில் நடக்க போவது என்ன என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் 08-ஆம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement