• Jul 26 2025

மாமன்னன் படம் எப்படி இருக்கு... படத்தைப் பார்த்து விட்டு தனுஷ் கூறிய விமர்சனம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘மாமன்னன் ’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர். 


அதுமட்டுமல்லாமல் முக்கிய வேடத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், லால், சுனில் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். அந்தவகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் நாளை (ஜூன் 29) தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் மாமன்னன் படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் அப்படம் குறித்த விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இப்பதிவில் "மாரி செல்வராஜின் மாமன்னன் படம் பார்த்த நெகிழ்ச்சியாக உள்ளது. மாரியை கட்டியணைத்து பாராட்டுகிறேன். வடிவேலு மற்றும் உதயநிதி தரமான நடிப்பை வழங்கியுள்ளனர். அதேபோல் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபஹத் ஃபாசில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இடைவேளை காட்சியில் தியேட்டர்கள் தெறிக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் சார் அழகு" என பாராட்டி தள்ளியுள்ளார். 

தனுஷின் உடைய இந்த பதிவுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதாவது அதில் "எல்லாவற்றுக்கும் நன்றி. உங்கள் ஆதரவு இல்லாமல் மாமன்னன் நிகழ்ந்திருக்காது" எனக்குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்களும் இப்படத்தைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளனர்.


Advertisement

Advertisement