• Jul 25 2025

கணவன் மனைவிக்குள்ள எதுக்கு சண்டை வருது... வெளியானது விக்ரம் பிரபுவின் 'இறுகப்பற்று' ட்ரெய்லர்... வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கிற திரைப்படம் 'இறுகப்பற்று'. காதலிக்கும் போது இருக்கும் அன்பு திருமணத்திற்கு பிறகு குறைந்து போவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக உருவாகி இருக்கும் படம் தான் இறுகப்பற்று.


யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கின்றது. இந்த  ட்ரெய்லர் ஆரம்பத்திலேயே கொஞ்சம் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ட்ரெய்லரில் மியூசிக் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.

 

"அதிலும் கணவன் மனைவிக்குள்ள சண்டை வருவதற்கு காரணம் தேவையில்லை, கணவன் மனைவியா இருக்கிறதே பெரிய காரணம் தான் " என்ற வசனம் இந்த படத்துல ஹைலையிட்டா இருக்கு. இப்படி எதிரும் புதிருமாக இருக்கும் கணவன், மனைவி  பிரச்சனை குறித்து இப்படம் பேசுகிறது.


வரும் அக்டோபர் 6ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் விக்ரம் பிரபுவுக்கு நிச்சயம் ஒரு கம்பேக் மூவியா இருக்கும். இப்படியாக வெளிவந்துள்ள ட்ரெய்லர் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.


Advertisement

Advertisement