• Jul 24 2025

அரைச்ச மாவை அரைப்பது போல் இருக்கே... சித்தார்த்தின் 'டக்கர்' படம் குறித்து ரசிகர்கள் முன்வைத்த ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டக்கர்’. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். அத்தோடு இவர்களுடன் இணைந்து யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் எனப் பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. இதன் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்துப் பார்ப்போம்.


அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் "சித்தார்த் தனது கதாபாத்திரத்தை மிகவும் அழகாக செய்திருக்கிறார், யோகி பாபு காமெடி வேலைகள் யாவும் நன்றாக உள்ளது & ஆர்ஜே விக்னேஷ்காந்த் பகுதி ஓகே ... ஆனால் கதையை வைத்துப் பார்க்கும் போது அரச்ச மாவா அரச்ச மாரி இருக்கு" எனப் பதிவிட்டுள்ளார்.


மற்றோரு நெட்டிசன் "நகைச்சுவை கள் மற்றும் கண்ணியமான பாடல்கள் நன்றாக உள்ளது. ஆனால் ஆக்ஷன் & எமோஷன்ஸ் சரியாக வேலை செய்யவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஒருவர் தெரிவிக்கையில் "முதல் பாதி திரைக்கதை விறுவிறுப்பாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. இரண்டாம் பாதி பயங்கரமாகவும், முற்றிலும் குப்பையாகவும் இருக்கிறது. இது ஹீரோவின் முக்கிய இலக்கை விட்டுவிட்டு முழுமையான காதல் பாதையில் செல்கிறது. காதல் பாடல் கூட லாஜிக் இல்லாதது போல இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.


இன்னொரு நெட்டிசன் " கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து பணக்காரனாகும் கீழ் நடுத்தர வர்க்கப் பையன் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. அந்த பிரச்சனைகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார், அதிலிருந்து மீண்டு வருகிறார் என்பதே கதை. ஆனால் கடைசியில் அவர் பணக்காரர் ஆகிறாரா என்பதுதான் கேள்வி" எனக் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறாக 'டக்கர்' படமானது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement