• Jul 25 2025

'குயிலைப் பிடிச்சு' பாடலுக்கு செந்தில் கொடுத்த ரியாக்சன்... சூப்பராக கண்டுபிடித்த இமான்... வயிறு குலுங்க சிரிக்க வைத்த வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் ஸ்ராட் மியூசிக் சீசன் 4. இந்த சீசன் மற்றைய சீசன்களை விட மிகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது. 


அந்தவகையில் மற்றைய சீசன்களை போல் இந்த சீசனையும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்காவின் நிகழ்ச்சி என்றாலே அதற்கென ஒரு ரசிகர்கள் கூட்டமும் உருவாகத் தொடங்கி விடுவர்.  


அதேபோன்று தான் ஸ்ராட் மியூசிக் ஷோவிற்கும் ஏராளாமான ரசிகர்கள் உண்டு. அந்தவகையில் இந்தவாரம் செந்தில், இமான் உட்பட காமெடி ஜாம்பவான்கள் பலர் இந்த ஷோவில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில்  "குயிலைப் பிடிச்சு கூண்டில் அடைச்சு" பாடல் ஒலிக்க விடப்படுகின்றது. அப்போது நடிகர் செந்தில் மற்றும் நடிகை வினோதினி இருவரும் நின்று பர்போமன்ஸ் பண்ணி பாடலைக் கண்டு பிடிக்க நடிகர் இமானுக்கு உதவுகின்றனர். 


இவர்களின் பெர்போமான்ஸை சரியாகப் புரிந்து கொண்ட இமான் உடனே பாடலைக் கண்டு பிடித்து விடுகின்றார். அதேபோன்று எதிர் டீமில் உள்ளவர்களும் சரியாக பாடலைக் கண்டுபிடித்து விடுகின்றனர். இதனையடுத்து சந்தோஷத்தில் ஆடுகின்றனர். இதனைப் பார்த்த செந்தில் பயித்தியமா எனக் கேட்கின்றார். அத்தோடு இமான் "ஸ்ராட் மியூசிக் ஷோவை மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க" என தனது பாணியில் கூறுகின்றார். இதனைக் கேட்டதும் பிரியங்கா உட்பட அரங்கத்தில் இருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.


Advertisement

Advertisement