• Jul 25 2025

டிஜே பிளாக்கிற்கு கல்யாணம்... பொண்ணு யாரு..? வெளிவந்த வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றிகரமாக செல்வதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் டிஜே பிளாக். இவர் ரியாலிட்டி ஷோக்களின் போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பிண்ணனியில் பாடல்கள் மற்றும் வடிவேலு, கவுண்டமணி போன்றவர்களின் குரல்களை ஒலிக்க விட்டு அவர்களை கலாய்ப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். 


இது ரியாலிட்டி ஷோக்களின் சுவாரசியத்தை இன்னும் அதிகமாக்கியது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரின் பங்கு அளப்பரியது. அந்த நிகழ்ச்சி இவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று சொன்னால் அதற்கு முக்கிய காரணம் டிஜே பிளாக் என்றும் கூறலாம். அதேபோல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் டிஜே பிளாக் போட்டியாளராக இருக்கும் பூஜா வரும்போது அவருக்கு ஏற்றார் போல பின்னணியில் பிக்கப் லைன்களை போடுவார். இதன் வாயிலாக பல ரசிகர்களின் மனங்களில் டிஜே பிளாக் ஒரு பிரபல நட்சத்திரம் போல் குடிகொண்டிருக்கின்றார்.


இந்நிலையில் விஜய் மற்றுமொரு ரியாலிட்டி ஷோவான ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளிவந்திருக்கின்றது. அதில் டிஜே பிளாக் மணமகன் போல் உடையணிந்து கையில் பூ வைத்துக் கொண்டு மேடையில் அமர்ந்திருக்கின்றார். அங்கு நின்ற பிரியங்கா "என் தம்பி டிஜே பிளாக்கிற்கு கல்யாணம்" எனக் கூறி குதூகலிக்கின்றார். 


இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் "கல்யாணம் எல்லாம் சரி முதல்ல பொண்ணு யாருன்னு சொல்லுங்க" எனக் கமெண்டுகள் மூலமாக கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement