• Jul 25 2025

எதிர்த்துப் பேசிய புகழ்... கை நீட்டி அடித்த மணிமேகலை... CWC ஷோவில் நடந்த சம்பவம்... வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ஷோக்களில் ஒன்று 'குக்வித் கோமாளி'. இந்நிகழ்ச்சியானது ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் நகைச்சுவை நிறைந்ததாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 4ஆவது சீசன் அட்டகாசமாக ஒளிபரப்பாகி வருகின்றது.


அந்தவகையில் ஒவ்வொரு வரவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மணிமேகலை தொகுப்பாளராக வருகை தந்துள்ளார். 


புகழிற்கு அருகில் சென்ற மணிமேகலை "அடேய் கோமாளி டக்கு டக்குன்னு வேலையை பாரேன்" எனக் கூறுகின்றார். அதற்கு புகழ் "நீ ரொம்ப ஓவராய் போராடி" எனக் கூறுகின்றார்.


அதனைக் கேட்டதும் மணிமேகலை புகழை கை நீட்டி "என்னையே எதிர்த்துப் பேசுவியா" எனக் கூறி அடிக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement