• Jul 24 2025

'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து நடக்கப் போவது இதுதான்... கோபியே வெளியிட்ட வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அதிரடித் திருப்பங்களும், விறுவிறுப்பான சம்பவங்களும் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன. இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர்.


அந்தவகையில் இந்த சீரியலில் தற்போது கோபி அதிகம் குடித்துவிட்டு இருந்ததால் அவரது அம்மா தனது வீட்டிலேயே இருக்க வைத்துவிட்டார். இந்த தகவல் அறிந்த ராதிகா தனது பையுடன் பாக்கியா வீட்டிற்கு வருகிறார், இனிமேல் நான் இங்கேயே தான் இருக்க போகிறேன் என கூறி அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் உறைய வைக்கின்றார்.


இந்நிலையில் இந்த சீரியலில் கோபி என்ற வேடத்தில் நடிக்கும் சதீஷ் படப்பிடிப்பில் இருந்து ஒரு வீடியோ ஒன்றினைத் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் "கோபியும் ராதிகாவும் பாக்கியா வீட்டில் உள்ளோம், பாக்கியா வீட்டில், அவரது அறையில் உள்ளேன், இனிமேல் இப்படி தான் கொஞ்சகாலத்திற்கு கதை நகரப் போகிறது. எது நடக்கக் கூடாதோ அது நடக்கப்போகிறது, பாக்கியா இன்னும் முழு பணம் கொடுக்கவில்லை, கோபி பெயரில் தான் வீடு, கோபிக்கு எல்லாரும் அடி இருக்கு" என கூலாக கூறியுள்ளார்.

இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement