• Jul 25 2025

அழகில்லாத காரணத்தால் திருமண வாழ்க்கையை இழந்த நாயகி- சீதா ராமம் சீரியலின் சுவாரஸிமான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய சீரியல் தான் ரோஜா. காதல் கதையை மையப்படுத்தி ஒளிபரப்பான இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்பட்டது.

இந்த சீரியலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக சிப்பு சூர்யன் மற்றும் ப்ரியங்கா ஆகியோர் நடித்து வந்தனர். இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கும் வந்தது. இதனால் இவர்கள் இருவரும் எப்போது அடுத்த சீரியலில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது.


இந்த நிலையில் சிப்பு சூர்யன் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பப்படவுள்ள பாரதி கண்ணம்மா சீரியல் சீசன் 2 இல் இணையவுள்ளார். அதே போல ப்ரியங்கா ஷு தமிழில் ஒளிபரப்பாகும் சீதா ராமம் என்னும் சீரியலில் இணைந்துள்ளார். இந்த நிலையில் விரைவில் ஒளிபரப்பப்படவுள்ள சீதா ராமம் சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement