• Jul 25 2025

அவர் பிஸியாக இருக்கிறார் எனக்கு கவலை இல்லை- சூப்பர் சிங்கர் பென்னி தயாளின் மனைவி சொன்ன சீக்ரெட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் மிக பிரபலமான பாடகராக இருப்பவர் பென்னி தயாள். இவர் 2002ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான மாயா மாயா என்ற பாடலை பாடி அறிமுகமானார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கிறார்.இது தவிர 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.பென்னி தயாள் 2016ம் ஆண்டு கேத்ரின் பிலிப் என்ற மாடல் அழகியை திருமணம் செய்துகொண்டார்


அந்த வகையில் அண்மையில் பென்னி-கேத்ரின் இருவரும்  தங்களது 7வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.இதனால்  கேத்ரின் அவர்களது திருமணம் குறித்த சீக்ரெட்டை வெளியிட்டுள்ளார். நாங்கள் இருவரும் வெவ்வேறு நாட்டை சார்ந்தவர்கள், அதனால் என்னுடைய பாஸ்போர்ட், ஓசிஐ கார்டு, சோசியல் செக்யூரிட்டி கார்டு என அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் மாற்றுவதில் கடினம் இருக்கிறது.

எனவே நான் பெயரை மாற்றவில்லை. பென்னி மிகவும் பிஸியாக இருப்பதால் குடும்ப செலவுகள் என அனைத்தையும் நான் தான் கவனிக்கிறேன். இதுதான் எங்களுடைய திருமண வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு காரணம்.வேலை காரணமாக நாங்கள் இருவரும் தூரமாக இருப்பதால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சில முறை மட்டும் தான் நேரில் பார்க்க முடிகிறது.இது கஷ்டமான நேரில் அல்ல. நிறைய தியாகம் தேவைப்பட்டாலும் நாங்கள் திருமண பந்தத்தில் வலிமையுடன் தான் இருக்கிறோம் என கூறியுள்ளார்.  


Advertisement

Advertisement