• Jul 25 2025

''அந்த கருப்பு கண்ணாடி மாட்டிட்டு cute ah நிக்குறாரே, அவரு தான் எங்க''....வைரலாகும் ஹிப்ஹாப் ஆதியின் பதிவு இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி சமூக வலைத்தளத்தில் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் குறித்து பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், அந்த கருப்பு கண்ணாடி மாட்டிட்டு கியூட்டா நிக்குறாரே, அவரு தான் எங்க இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன்! அவருக்கு ஒரு கோட்ட மாட்டி ஃப்ரேம் குள்ள நிக்க வெக்கறதுக்கு நாங்க பட்ட பாடிருக்கே .. எல்லா புகழும் காளி அண்ணனுக்கே என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement