• Jul 25 2025

காதலர் தின பரிசாக ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ஆல்பம் பாடல் வெளியீடு!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் என்ற பன்முகங்களைக் கொண்ட ஹிப்ஹாப் தமிழா ஆதியின் உருவாக்கத்தில்,  சுயாதீன ஆல்பம் பாடல் “பொய் பொய் பொய்” காதலர் தின சிறப்பு வெளியீடாக பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.

தமிழில் ஹிப் ஹாப் ஸ்டைல் பாடல்களால் கவனம் பெற்ற ஹிப் ஹாப் தமிழா ஆதி, பின்னர் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் வளர்ந்தார். பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும், நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகர் பட்டாளம் உள்ளனர். 

இந்நிலையில்தான் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் புதிய ஆல்பம் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது.

ஆம், ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் “பொய் பொய் பொய்”  எனும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றி செல்லும் பெண்ணின் துரோகம், வலி, ஏமாற்றம்  என  காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல்.  

துடிப்பான இசை, அழகான விஷுவல்களில் மனதை கொள்ளைக் கொள்ளும் அற்புதமான காதலர் தின பரிசாக இப்பாடல் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராப் பாடகராக அறிமுகமாகி, இயக்குநர் நடிகராக வளர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடர்ந்து சுயாதீன ஆல்பம் பாடல்களையும் தொடர்ந்து உருவாக்கி  வருகிறார். “பொய் பொய் பொய்” பாடலை தொடர்ந்து மாதாமாதம், ஒரு சுயாதீன பாடலை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement