• Jul 25 2025

"இவரின் மறைவு மிகப்பெரிய இழப்பு".. பிரபல நகைச்சுவை நடிகரின் இறப்பினால் வருந்தும் ஏ.ஆர்.ரஹ்மான்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கே.பாலசந்தர் இயக்கிய 'மனதில் உறுதிவேண்டும்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விவேக் 'புது புது அர்த்தங்கள்' என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இவர் காமெடியனாக மட்டுமன்றி பிரபல குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார். 


ஆரம்பத்தில் நாடக்கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கிய விவேக், 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை கலைஞனாக திகழ்ந்து வந்திருந்தார். அத்தோடு அப்துல்கலாம் வழிகாட்டுதலில் நாட்டின் வரட்சியைப் போக்கும் விதமாக மரக்கன்றுகளை நடும் திட்டத்தையும் அவ்வப்போது செயல்படுத்தி வந்தார். 


இந்நிலையில் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு இன்றளவும் தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.


அந்தவகையில் ட்விட்டரில் பயனாளர் ஒருவர், விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த காட்சியில் விஜயகாந்த், விவேக் ஆகியோர் இடம் பெற்றிருப்பர்.


இந்த பதிவை ஷேர் செய்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் "நகைச்சுவை ஜாம்பவான் விவேக் மிஸ் செய்கிறேன். அவரின் மறைவு மிகப்பெரிய இழப்பு" என மிகவும் உணர்ச்சி பூர்வமாக குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement