• Jul 25 2025

நாமினேஷனிலும் அசீமையே குறி வைக்கும் ஹவுஸ்மேட்ஸ்- விக்ரமனுக்கு அவர் கொடுத்த மரியாதை- விறுவிறுப்பான முதலாவது ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிப் பகுதியை எட்டியுள்ளது. 13 வாரங்களை கடந்து இன்று 14வது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், ஏற்கனவே 13 பேர் வெளியேறிவிட்டனர்.

மேலும் ஒரு போட்டியாளரான ரச்சிதா நேற்றைய தினம் எவிக்சன் செய்யப்பட்டார். அதனையடுத்து தற்போது பிக் பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, மைனா என மொத்தம் 7 பேர் மட்டுமே உள்ளனர். அடுத்த வாரம் டைட்டில் வின்னர் யார் என்ற ரிசல்ட் தெரிந்துவிடும்

சென்ற வாரத்தின் இறுதி இரண்டு நாட்களும் கமல் எபிசோட் நடைபெற்று முடிந்தது. இதில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குணாதிசயங்கள், தகுதி அடிப்படையில் யார் பெஸ்ட், யார் வொர்ஸ்ட் போன்ற பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இதில் வழக்கம்போல கோபம், சண்டை போடுவது, மரியாதை இல்லாமல் பேசுவது, இறுதியாக டைட்டில் பெறவே தகுதி இல்லாதவர் என்ற பல விமர்சனங்களுக்கும் ஆளானார் அசீம்.

இதனை அடுத்து இன்றைய தினம் இறுதி நாமினேஷன் நடைபெற்றுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் அசீமையே நாமினேஷன் செய்துள்ளனர்.ஆனால் அசீம் நான் விக்ரமனை நாமினேஷன் செய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அசீமை எல்லோரும் டாக்கெட் பண்ணுவது அவருடைய ரசிகர்களை கடுப்படையச் செய்துள்ளது எனலாம்.


Advertisement

Advertisement