• Jul 23 2025

நீ எவ்ளோ பெரிய ஒரு செலிபிரிட்டி? -இந்த படத்திற்கெல்லாம் இசையமைக்கிறதா?- அனிரூத்திற்கு கண்டிஷன் போட்ட அவரது தந்தை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் இந்திய சினிமாவிலேயே ஒரு கலக்கு கலக்கி வருபவர் இசையமைப்பாளர் அனிரூத். சிறு வயதில் கீ போர்டை எடுத்த அவர் உலக நாடுகள் வரை தன் இசையால் அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறார்,

இன்று முன்னனி நடிகர்களாக இருக்கும் பல பேரின் படங்களுக்கு அனிருத் தான் தீனியே. அவர் இசையில் அமையாத எந்த ஒரு முன்னனி நடிகர்களின் படங்களும் வெளியாவதில்லை. அந்த அளவுக்கு குறுகிய காலத்தில் சினிமாவையே தன் கட்டுக்குள் கொண்டு வந்தவர்.


விஜய்யின் லியோ, ரஜினியின் ஜெய்லர், அஜித்தின் அடுத்த படம் என மெகா ஸ்டார்களின் படங்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றன. இந்த நிலையில் டான்ஸ் மாஸ்டரான சதீஷ் ஒரு படம் இயக்கப் போகிறாராம். அந்தப் படத்திற்கு ஹீரோவாக நடிகர் கவின் தான் நடிக்க இருக்கிறாராம்.சதீஷ், கவின் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்திற்கு அனிரூத் தான் இசையமைக்கப் போகிறாராம். இந்த செய்தியை கேட்ட அனிரூத்தின் தந்தையான நடிகர் ரவிச்சந்திரன் ‘ நீ எவ்ளோ பெரிய ஒரு செலிபிரிட்டி? சின்ன படத்திற்கெல்லாம் இசையமைப்பது சாத்தியமாகுமா?’ என்று அனிரூத்தை தடுத்தாராம்.


ஆனால் அனிருத் நடிக்கும் பல விளம்பரப் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருப்பவரே சதீஷ்தானாம். அதுமட்டுமில்லாமல் வெளி நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அனிரூத்தின் இசைக் கச்சேரிக்கும் சதீஷ் தான் மாஸ்டராக இருக்கிறாராம். அதனாலேயே அவர் இயக்கும் படத்திற்கு நண்பனாக அனிரூத் இசையமைப்பார் என்று தெரிகிறது.

Advertisement

Advertisement