• Jul 26 2025

அட்லீ மீது பிரபல தயாரிப்பாளர் கொடுத்த புகார்-சிக்கியது எப்படி..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லீ எஸ். ஷங்கரின் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கி  2013ல் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்

இப்படம் கொடுத்த மாபெறும் வெற்றி இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு  அவருக்கு கிடைத்தது.இதன் பின் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என இயக்கிய அட்லீ இப்போது பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகின்றார்.

எனினும் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்க ஷாருக்கான், ரஜினி, விஜய், அனிருத் போன்றவர்களுடன் நேரத்தை கழித்துள்ளார். 

அத்தோடு இந்த ஜவான் படத்தின் படப்பிடிப்பு ஓரளவிற்கு முடிந்துள்ள நிலையில் தற்போது கதை குறித்து பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது ஜவான் திரைப்படம் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதை என சொல்லப்படுகிறதாம்.இந்த படத்தின் கதை தான் ஜாவான் படத்தின் கதை என பேரரசு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். 


இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வருகிற ஒன்பதாம் தேதிக்கு மேல் விசாரணை நடத்த இருப்பதாகவும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவெடுத்து இருக்கின்றனர். அத்தோடு ஏற்கனவே அட்லீ என்றால் காப்பி என்ற சர்ச்சை சோசியல் மீடியாவில் இருக்கிறது. அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படம் மௌனராகம் படம், மெர்சல் படம் மூன்று முகம் படம் என்று விமர்சித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து தற்போது ஜவான் படத்திற்கும் சர்ச்சை எழுந்திருக்கிறது.


Advertisement

Advertisement