• Jul 23 2025

இத மிஸ் பண்ணிட்டீங்களே சித்தார்த்... "சித்தா" படம் எப்படி இருக்கு பொதுமக்கள் விமர்சனம்... கண்ணீருடன் நின்ற இயக்குனர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பண்ணையாரும்  பத்தமினியும் , விஜய்சேதுபதி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சு.அருண்குமாரின் இயக்கத்தில் சித்தார்த் நடித்த " சித்தா" திரைப்படம் செப்டெம்பர் 28 -ஆம் திகதி வெளியாகியுள்ள நிலையில்   இத்திரைப்படத்தை பார்வையிட வந்த பொதுமக்களின் விமர்சனத்தை தெரிந்துகொள்ளவதற்காக சென்றிருந்த அவருக்கு தியேட்டரில் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். 


பலரும்  ஓடி வந்து கட்டி அனைத்து பாராட்டு தெரிவித்தனர் , உண்மையை அப்படியே எடுத்துளீர்கள் என்று மகிழ்ச்சியாக கூறுகின்றனர். இவ்வாறான பாராட்டுகளை  எல்லாம் பார்த்து சந்தோசத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே திகைத்து நின்றார் இயக்குனர். 


இதை எல்லாம் கண் நிறைய பார்த்து மனம் நிறைய பூரித்து போவதை விட ஒரு கலைஞனுக்கு வேறு என்ன  வெகுமதி இருந்துவிட முடியும் அப்படிப்பட்ட காட்சிகளை பார்க்க சித்தார்த்துக்கு கொடுத்து வைக்கவில்லை என்றுத்தான் சொல்ல வேண்டும் .


சொல்வதற்கு வார்த்தை இல்லை படம் சூப்பர் என பெண்களும் வாழ்த்து தெரிவிக்க ,  இயக்குனர் ரசிகர்களின் அன்பு மழையால் மகிழ்ந்து  தலை வணங்கி நன்றி தெரிவித்து நின்றார். பாராட்டுக்களை பார்த்து  ஆனந்த கண்ணீர் வழிய நின்ற இயக்குனருடன் ரசிகர்கள் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். ஆகமொத்தத்தில் இயக்குனரை பொருத்தவரையில்" சித்தா"  படம் வெற்றிதான். 


Advertisement

Advertisement