• Jul 23 2025

'மாவீரன்' படம் எப்படி இருக்கிறது..? சிவகார்த்திகேயன் சிரிக்க வைத்தாரா..? சிந்திக்க வைத்தாரா..? விமர்சனம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது 'மாவீரன்' திரைப்படம் உருவாக்கியுள்ளது. இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


இந்நிலையில் இப்படமானது சர்வதேச அளவில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் "படம் வேற லெவலில் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஒருவர் "சிறப்பான தரமான சம்பவம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


மற்றோர் நபர் கூறுகையில் "பயனற்ற படம். தொடர்ச்சியான காட்சிகள் மற்றும் க்ரிங் பாடி ஷேமிங் காமெடி, மடோன் அஷ்வினிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.


இருப்பினும் இத்தகைய விமர்சனங்களை வைத்துப் பார்க்கும் போது அதிகளவில் பாசிடிவ் கருத்துக்களை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றமை தெளிவாகின்றது. ஆகவே படம் வெற்றியடையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

Advertisement

Advertisement