• Jul 23 2025

வாரிசு படத்திற்கு விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா? பெரும் அதிர்ச்சியில் திரையுலகம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் 'வாரிசு' படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி திரையுலகினரை  பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய்... கடைசியாக நடித்த வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவிய நிலையில், இந்த படத்தை தொடர்ந்து 'வாரிசு' படத்தில் நடித்து வருகின்றார்.

 அத்தோடு முதல் முறையாக தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி இயக்கத்தி, விஜய் நடித்து வரும் இந்த திரைப்படம் குடும்ப சென்டிமென்டை அடிப்படையாக வைத்து, ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி 'வாரிசு' திரைப்படம் வெளியாகவுள்ளதாக அதிகார பூர்வமாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 'வாரிசு' படத்தின் புரமோஷன் மற்றும் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளிலும் படக்குழு அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

 

மேலும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அத்தோடு முக்கிய கதாபாத்திரத்தில், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 


 அஜித்தின் 'துணிவு படத்துடன் 'வாரிசு' திரைப்படம், மோத உள்ள நிலையில் 'வாரிசு' படத்தில் நடிக்க விஜய் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறித்த  தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அத்தோடு , வாரிசு படத்திற்காக விஜய் சுமார் 125 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. கடைசியாக நடித்த பீஸ்ட் படத்திற்கு கூட 80 கோடி மட்டுமே விஜய் சம்பளமாக பெற்ற நிலையில் தற்போது அதை விட 45 கோடி, அதிகமாக பெற்றுள்ளார். இந்த தகவல் திரையுலகினரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது


Advertisement

Advertisement