• Jul 24 2025

என் அப்பா வயசு என்ன, என் வயசு என்ன- தன்னை கேலி செய்தவருக்கு அதிதி ஷங்கர் கொடுத்த பதிலடி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தந்தையின் ஆசைக்காக படித்து டாக்டர் ஆகிய பின்னர் தன்னுடைய ஆசைக்காக நடிகையாக அறிமுகமாகியிருப்பவர் தான் அதிதி ஷங்கர்.அதன் படி இவர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்தார்.

இது தவிர அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.


மேலும் இவ் படங்களின் ப்ரமோஷனுக்காக பல்வேறு சேனல்களுக்கும் பேட்டியளித்து வந்தார். இவர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது சொன்ன மொக்க ஜோக்குகளால் இவரை ரசிகர்கள் கேலி செய்து வருவதும் உண்டு. அதிலும்  'சன்டே சண்டை போடலாம், ஆனா மண்டே மண்டைய போட முடியுமா' என அதிதி மேடையில் சொன்ன ஜோக் இணையத்தில் வைரலாகி அதிகம் ட்ரோல்களை சந்தித்தார்.

இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னை cringe என விமர்சித்த நபருக்கு அதிதி பதிலடி கொடுத்து இருக்கிறார். 'ஷங்கர் போல மெச்சூர் ஆக இருப்பார் என பார்த்தால், cringe ஆக இருக்கிறார்' என அந்த நபர் கமெண்ட் செய்திருந்தார்."என் அப்பா வயசு என்ன, என் வயசு என்ன. அவர் அப்பா மாதிரி இருப்பார், ஆனால் நான் என்னைப்போல தான் இருப்பேன்" என தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement