• Jul 25 2025

ரன்வீர் நடத்திய நிர்வாண போட்டோ ஷுட் எப்படி இருந்தது- முகத்தை சுழித்த ஆல்யா பட்- எனக்கு பிடிக்கவே இல்லை

stella / 3 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ரன்வீர் சிங். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த 83 திரைப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இதையடுத்து ஏராளமான படங்களில் நடித்து வரும் ரன்வீர் சிங், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிப்பு ஆரம்பமாவுள்ளது.நடிப்பதை விட மாடலிங்கிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அந்த வகையில், தற்போது ரன்வீர் பத்திரிகை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். ரன்பீரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி வருகின்றது.

மேலும், ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோனே நிர்வாண போட்டோஷூட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த புகைப்படம் பத்திரிக்கையில் வெளியாகும் முன்பே நான் பார்த்துவிட்டேன் எனக்கு பிடித்திருந்தது. ரன்வீர் எப்போதும் வித்தியாசமாக எதையாவது முயற்சித்து பார்க்க வேண்டும் என்று விரும்புவார் அவருக்கு எப்போதும் நான் துணையாக இருப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆலியா பட் நடித்துள்ள டார்லிங்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆலியாவிடம், ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆலியா, தனக்கு பிடித்த சக நடிகருக்கு எதிராக நான் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். ஆனால், எனக்கு பிடித்த சக நடிகரான ரன்வீரைப் பற்றி வரும் எதிர்மறையான கருத்துக்கள் எனக்குப் பிடிக்கவில்லை. எனவே அந்தக் கேள்வியை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை என்று ஆலியா பட் பதிலளித்தார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

.

Advertisement

Advertisement