• Jul 24 2025

அமீர் எந்த படத்திற்காக சர்ச்சையில் சிக்கினார்... எப்படி மீளப்போகிறார்...?

ammu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் அமீர் தமிழ் சினிமாவில் “ராம்”, “பருத்திவீரன்” போன்ற திரைப்படங்களின் மூலம் பெருமை சேர்த்தவர்.  இவர் இயக்கிய “ஆதிபகவன்” திரைப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அதனை தொடர்ந்து இவர் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிவிட்டார்.


எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு அமீர், ஆர்யாவை வைத்து “சந்தனத் தேவன்” என்ற திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, அத்திரைப்படம் அப்படியே நின்று விட்டது. இதனை தொடர்ந்து தற்போது “இறைவன் மிகப் பெரியவன்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.


“இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் கதையம்சத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சிறைவாசிகளின் ஆயுள் தண்டனை காலம் முடிவடைந்த பிறகும் அவர்களை சிறையில் வைத்திருக்கிறார்கள் எனவும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் பல குரல்கள் எழுந்து வருகின்றன.


இதனை மையப்படுத்தியே “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் கதையம்சம் அமைந்துள்ளதாக பத்திரிக்கையாளர் சி.சக்திவேல் தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமா உலகின் மீதே சமீப காலமாக பல திரைப்படங்களுக்கு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. 


கடந்த மாதம் வெளியான “பதான்” திரைப்படத்திற்கு கூட பல சர்ச்சைகள் வெடித்தன. இந்த நிலையில் அமீரின் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தில் மிகச் சர்ச்சையான சம்பவத்தை அமீர் எப்படி கையாண்டிருக்கிறார் என்பதையும் இந்த படம் சர்ச்சைகளை தாண்டி எப்படி வெற்றி அடையப்போகுது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


Advertisement

Advertisement