• Jul 26 2025

சமந்தாவின் யசோதா திரைப்படம் எப்படி இருக்கு - ரசிகர்களின் டுவிட்டர் விமர்சனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில்  நடிகை சமந்தா நடிப்பில் இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் யசோதா. இந்தத் திரைப்படத்தில் சமந்தா வாடகை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் வரலக்ஷ்மியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


அந்த வகையில் இன்றைய தினம் வெளியாகிய இப்படத்தை பார்த்தவர்கள் இது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தியா தவிர்த்து அமெரிக்காவிலும் யசோதாவுக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது


படம் பார்த்தவர்கள்  டுவிட்டரில் கூறியிருப்பதாவது, சமந்தாவின் நடிப்பு சிறப்பு. திருப்தி அளிக்கும் எமோஷனல் த்ரில்லராக அமைந்திருக்கிறது யசோதா. படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் சமந்தா. பிஜிஎம் அருமை. விஷுவல்ஸ், ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருக்கிறது. கான்செப்ட் சிறப்பு என தெரிவித்துள்ளனர்.

யசோதா படம் பார்த்தவர்கள் அது குறித்து நல்லபடியாக விமர்சிப்பது படக்குழுவை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. இது சமந்தாவுக்கு கிடைத்த வெற்றி என்று ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயில் இருந்து மீண்டு வருகிறார் சமந்தா. யசோதா படத்தில் நடித்தபோதே அவருக்கு மயோசிடிஸ் பிரச்சனை இருந்திருக்கிறது. இருப்பினும் அதை யாருக்கும் சொல்லாமல் நடித்திருக்கிறார். மேலும் ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்தியிருக்கிறார். அந்த ஆக்ஷன் காட்சிகள் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement