• Jul 25 2025

நள்ளிரவில் சாலையோரம் நடந்து சென்ற ஹிருத்திக் ரோஷன்- கத்திக் கூச்சலிட்ட ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் ஹிருத்திக் ரோஷன்,இவர் இறுதியாக புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் நடித்திருந்தார்.இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருந்தது.

இதனை அடுத்து தற்போது ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே நடிக்கும் ஃபைட்டர் படத்தில் நடித்து வருகின்றார். ஃபைட்டர்  2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் முதல் ஏரியல் ஆக்சன் திரைப்படம் என்ற வாசகத்துடன் இந்த படம் வெளியாக உள்ளது. சித்தார்த் ஆனந்த் இந்த படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேஸ்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள விமானப்படை தளத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கலந்து கொண்டுள்ளார்.

இச்சூழலில் தேஸ்பூர் நகரில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடந்து செல்லும் போது ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். அப்போது அவர்களை நோக்கி கை அசைத்த ஹிருத்திக் ரோஷன், "நான் தான் மிகுந்த அதிர்ஷ்டசாலி" என ரசிகர்களை நோக்கி பேசி சென்றார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement