• Jul 25 2025

சங்கர் SIR சொன்ன வார்த்தைக்காகதான் அந்த SCENE நடிச்சேன்" - நடிகை புவனேஸ்வரி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும சீரியல்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் புவனேஷ்வரி. இவர் தீபம் என்னும் சீரியல் மூலம் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து பல சீரியல்களிலும் சினிமாவிலும் நடித்து வந்த இவர் தற்பொழுது பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது

நான் முதலில் சீரியலில் தான் நடிக்க ஆரம்பித்தேன். சீரியலில் நடிக்க வந்ததற்குப் பிறகு தான் எனக்கு பிரச்சினையே ஆரம்பித்தது. குறிப்பாக நான் பெண்கள் எந்த எந்த பிரச்சினைகளை அனுபவிக்கக் கூடாதோ அதெல்லாம் நான் அனுபவிச்சேன்.மேலும் இந்த பிரச்சினை எல்லாம் நடந்திட்டு இருக்கும் பொது வீட்டில இருக்கிவங்க எனக்கு சர்போட் பண்ணினாங்க.


மேலும் நான் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமாகினேன். இதில் கவர்ச்சி வேடத்தில் நடித்த போது எனக்கு தப்பா தெரில. சங்கர் சேரின் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லும் போது எனக்கு பெருமையாக இருந்தது. பாய்ஸ் படத்திற்குப் பிறகு தான் தெலுங்கில் நான் படம் நடிக்க எனக்கு வாய்ப்பு அதிகமாக கிடைச்சிச்சு.


என்னுடைய நடிப்பு ரசிகர்களுக்கு பிடிச்சிருந்திச்சு ஆனால் நான் வளர்றது பிடிக்காதவங்க தான் என்னைப் பற்றி தப்பா பேசிட்டு இருந்தாங்க. சினிமாவிற்கு வந்ததற்குப் பிறகு தான் இந்த உலகத்தில இருக்கிறவங்களை பற்றி புரிந்த கொள்ள முடிஞ்சிது.நான் எதுக்கும் அழ மாட்டேன் அழுதால் மற்றவங்க மேல இருக்கிற வன்மம் போய்டும். எனக்கு இப்போது என்னுடைய சர்ப்போட்டாக மகன் இருக்கின்றான் அதுவே போதும். மக்களுக்கு என்னைப் பற்றி புரிய வைக்க முடில என்ற சின்ன கவலை தான் இப்பொ இருக்கு என்றும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.


Advertisement

Advertisement