• Jul 25 2025

எனக்கும் ஒரு சாதி அடையாளம் இருக்கிறது அதை நான் சொன்னதே இல்லை- மாமன்னன் படத்தை பார்த்த ஆனந்த ராஜ் அளித்த பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகிய மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதையும் தாண்டி, நடிகர் வடிவேலுவின் கதாபாத்திர வடிவமைப்பே பெரும்பாலான சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அனைத்து தரப்பினரும் படத்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மாமன்னன் படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் ராஜ், சாதி குறித்து பல இயக்குநர்கள் பல விதமான கருத்துக்களை யாரையும் காயப்படுத்தாமல் சொல்லி இருப்பார்கள். ஆனால், நாம் ஒரு விஷயத்தை கோவத்தின் காரணமாகவோ, விரக்தியின் காரணமாகவோ சொல்லும் போது அது வெளிச்சமாக அதிகமாக வெளியில் தெரிகிறது, அதை குறைத்துக் கொண்டு சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.


தனிப்பட்ட முறையில் எனக்கு என்று ஒரு சாதி அடையாளம் இருக்கிறது. அதை நான் வெளியில் எப்போதும் சொன்னது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் தாய் எவ்வளவு முக்கியமோ அதே போல மொழி, இனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தனபால் அவர்கள் சபாநாயகராக இருந்த போது நானும் உடன் இருந்து இருக்கிறேன். அவருக்காக இரண்டு முறை அவரது தொகுதியில் பிரச்சாரங்களை செய்து இருக்கிறேன்.


இது சபாநயகர் தனபால் அவர்களின் கதை என்று சொல்லப்படுகிறது. ஆனால் கதையின் ஆழத்தை உணர்ந்து கதைக்கு ஏற்ப மக்கள் படத்திற்கு மரியாதை கொடுத்திருக்கிறார்கள். சாதி இல்லாத, இனம் இல்லாத, மொழி இல்லாத ஒரு தொழில் இருக்கிறது என்றால் அது சினிமா மட்டும் தான் முக்கியம் என்று ஆனந்த் ராஜ் பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement