• Jul 25 2025

நான் அகில உலக சூப்பர் ஸ்டார் எனக்கு போட்டி இந்த நடிகர் தான் - முதன் முறையாக ஓபனாக பேசிய மிர்ச்சி சிவா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல்யமான நடிகராக வலம் வருபவர் தான் மிர்ச்சி சிவா.அகில உலக சூப்பர்ஸ்டார் என  ரசிகர்களால் அன்போடு குறிப்பிடும், இவரது நடிப்பில் அடுத்ததாக "சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் சிவாவுடன் அஞ்சு குரியன், மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்னேஷ் ஷா இயக்கி உள்ளார். லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள சூழலில், ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


மேலும், லார்ட் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளது.சமீபத்தில் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. ஸ்மார்ட் போன் ஒன்றைக் கொண்டு சிவா சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களை காமெடியாக இந்த படம் எடுத்துரைப்பதும் ட்ரெய்லர் மூலம் தெரிய வருகிறது. 

மேலும், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படம், பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பிலும் நடிகர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, சூப்பர் ஸ்டார்  பட்டம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.


 இதற்கு பதில் அளித்த சிவா, "பிரச்சனை எல்லாம் தமிழ்நாடு,  இந்தியாக்குள்ள மட்டும்தான். நான் அகில உலக சூப்பர் ஸ்டார், மில்லியன்ஸ் ஆஃப் கேலக்ஸி, கருந்துளை தெரியுமா? பிளாக்ஹோல் அதுக்கு கிட்ட போயிட்டோம் நம்ம. நமக்கு போட்டி யாருமே இல்லை. தமிழ்நாட்டில் என்னைக்குமே ஒரே சூப்பர் ஸ்டார் தான் அது ரஜினிகாந்த் சார் மட்டும் தான். அவர் Legend." என சிவா பதில் அளித்தார்.



Advertisement

Advertisement