• Jul 25 2025

“நான் ஒரு தமிழ் நடிகன் .. எனக்கு தமிழ் தான் பேச வரும்- நடிகர் தனுஷின் ஓபன் டாக்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் தான் வாத்தி.கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது.  இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள். கல்வித்துறையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் ட்ரெய்லரில், “படிப்பு பிரசாதம் மாதிரி குடுங்க. 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி கொடுக்காதீங்க” என்கிற வசனம் வரும். அந்த ஒற்றை வரிகளே கதையின் தன்மையை புரியவைக்கிறது. 


 கல்வி வியாபாரமாக்கப்படுவதையும், தவறான ஆட்கள் கையில் சிக்கிக் கொள்வதையும் அதை எதிர்க்கும் நல்லாசிரியரின் பார்வையில் இருந்து விவரிக்கப்படுகிறது.இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் ரசிகர்கள் முன்பாக மேடையில் தம் படக்குழுவினருடன் நின்றபடி பேசிய நடிகர் தனுஷ்,  “நான் ஒரு தமிழ் நடிகன் .. எனக்கு தமிழ் தான் பேச வரும், இருப்பினும் புரோக்கன் தெலுங்கு மொழியில் ஓரளவு பேசுகிறேன்” என குறிப்பிட்டு பேசத் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement