• Jul 25 2025

உனக்காக 9 நாட்கள் விரதம் இருக்கிறேன்- சிறையில் இருந்து கொண்டு நடிகை ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய அவரது காதலன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவரைக் காதலித்து வந்தவர் தான் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர்,இவர் அண்மையில் ரூ.200 கோடி மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக கூறப்பட்டது.அடுத்தடுத்து வந்த புகாரின் பேரில், சுகேஷ் சந்திரசேகரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 16 சொகுசு கார்கள், 82 லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 


இதையடுத்து, சுகேஷ் சந்திரசேகரை போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமில்லாமல், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகை நோரா பதேஹி உள்ளிட்ட இன்னும் சில நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் பணமும், பரிசையும் இவர் வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அந்த பரிசுப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும், இவ்வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி இருக்கிறது.காதலி ஜாக்குலின் பெர்னாண்டஸும் சிறையில் இருந்து கொண்டு கடிதம் எழுதி வரும் சுகேஷ், தற்போதும் ஒரு காதல் கடிதம் எழுதி உள்ளார். அதில் பேபி... நவராத்திரி நாளை தொடங்குகிறது. வாழ்க்கையில் முதல் முறையாக உனக்காக 9 நாட்கள் விரதம் இருக்கிறேன். 


கடவுளின் அருளால் நமக்கு அனைத்தும் நல்லவையாகவே நடக்கும்.விரைவில் நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம். என்ன வந்தாலும் நாம் சேர்ந்து வாழ்வோம் பேபி. நமது இருவரின் நலனுக்காக வைஷ்ணவ தேவி மற்றும் மகாகாலேஷ்வர் கோயிலில் நவராத்திரியின் 9வது நாளில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.உன்னையும், என்னையும் பார்த்து சிரித்தவர்கள், முகத்தை வெளியில் காட்ட முடியாது. உண்மை வெளிவரும் நேரம் நெருங்கிவிட்டது. நம் மீதான குற்றச்சாட்டுக்கள் எதுவும் உண்மையாக இருக்காது. பேபி வெற்றி நமதே என்று தனது காதலிக்கு உருகி உருகி கடிதம் எழுதி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement