• Jul 24 2025

உங்களால் நான் சந்தோசமாக இருக்கின்றேன்- குட் நியூஸ் சொன்ன ரவீந்தர் மகாலட்சுமி தம்பதியினர்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் மகன் உள்ள நிலையில் அண்மையில் லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்தத இவர்களின் திடீர் திருமணம் குறித்து இணையத்தில் பல விமர்சனங்களும், கருத்துகளும் வலம் வந்து கொண்டிருந்தன. திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதியினர் ஜோடியாக யூடிப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தனர். இந்நிலையில் திருமணமாகி 100 நாள் ஆனதை அடுத்து இது குறித்து நெகிழ்ச்சியான பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் ரவீந்தர் சந்திரசேகர்.


அதில், ‘100 நாட்கள் முடிந்தது. இந்த 100 நாள் பதிவுக்கு ஒரு நல்ல தலைப்பு எழுத என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். ஆனால் என்னால் நாடகமாக எழுத முடியவில்லை. நான் நினைப்பதை எழுதுபவன். 30 வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு நொடியும் இந்த 100 நாட்களில் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். 


அதே அன்பு அதே அக்கறை வேடிக்கை சண்டை என என்னை நகர்த்திக் கொண்டே இருங்கள், உங்களால் நான் சந்தோசமாக இருக்கின்றேன்’ என்று பதிவு செய்துள்ளார்.அவரின் இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதை தொடர்ந்து அதுக்குள்ளே 100 நாள் ஆச்சா என ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் ரசிகர்கள் பலரும் ரவீந்தர் - மகாலட்சுமி தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement