• Jul 26 2025

நான் அந்த நடிகையை திருமணம் செய்து விட்டேன் இது பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை- புகார் அளித்த பிரபல மாரி பட இயக்குநர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'ஏழாம் அறிவு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தன்யா பாலகிருஷ்ணன். இந்த படத்தை தொடர்ந்து, காதலின் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழைத் தவிர தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வரும் தன்யா பாலகிருஷ்ணன், 'காதலின் சொதப்புவது எப்படி','வாயை மூடி பேசவும்', 'மாரி', 'மாரி 2' போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குநர் பாலாஜி மோகனை, ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு வெப் சீரிஸ்களில் நடித்து வரும் நடிகை கல்பிகா கணேஷ் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருமணம் ஆகி ஒருவருடம் ஆகும் நிலையில், இந்த ஜோடி திருமணத்தை மறைத்து வருவதாகவும் தற்போது தனியா பாலகிருஷ்ணன், தெலுங்கு மற்றும் கன்னட பட ப்ரமோஷன்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கும் அவருடைய கணவர் பாலாஜி மோகன்தான் காரணம் என்பது போல கூறி இருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ளார்  இயக்குநர் பாலாஜி மோகன். இதில் தன்யா பாலகிருஷ்ணன் தன்னுடைய மனைவி என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளது மட்டும் இன்றி, தங்களுடைய சொந்த வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வரும், கல்பிகா கணேஷ் தங்களை பற்றி பேச தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார்.


 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணன் குறித்து கருத்து தெரிவிக்க கல்பிகா கணேஷுக்கு தடை விதித்துள்ளது மட்டும் இன்றி, இந்த மனுவுக்கு ஜனவரி 20 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 


கல்பிகா கணேஷ் எழுப்பிய பிரச்சனையின் காரணமாக, திருமணம் ஆகி 11 மாதங்கள் ஆன பின்னர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணன்.. திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement