• Jul 25 2025

''நான் இப்போ கமல் சாருக்கு அந்த மாதிரி வேலை செய்யுறேன்'' – மனம் திறந்த நடிகை அபிராமி..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஹிட் திரைப்படங்களில் நடித்து அசைக்க முடியாத இடத்தில் மறந்துவிட்டார்.

தற்போது 68 வயதாகும் கமல் ஹாசன் முன்னணி நட்சத்திர நடிகராகவே இருந்து வருகிறார். கூடவே நிறைய காதல்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். அந்த லிஸ்டில் நடிகை ஸ்ரீவித்யா, சிம்ரன், அபிராமி , கவுதமி, பூஜாகுமார், ஆண்ட்ரியா என காலத்திற்கு தகுந்தாற் போல் மாறிக்கொண்டே சென்றது.

அதில் முக்கியமான நடிகையாக விருமாண்டி ஹீரோயின் அபிராமியும் பேசப்பட்டார். அதன் பின்னர் அபிராமி 2009ம் ஆண்டு ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு இரண்டு மகள்களை பெற்று குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் தற்போது அபிராமி ஒரு கோடை Murder Mystery என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் கமல் ஹாசனுடன் நல்ல நட்பு முறையில் தான் இருந்து வருகிறேன். அவரது நடிப்பில் வெளியான விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படத்தில் டப்பிங் வேலையை செய்திருக்கிறேன் என்றார். பின்னர் விருமாண்டி 2 எடுத்தால் கமலுடன் நடிப்பீர்களா? என கேட்டதற்கு, கமல் சார் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால், அதில் நான் ஹீரோயினாக வேண்டும் என கேட்டால் “நோ” சொல்லவா முடியும்? நிச்சயம் நடிப்பேன் என பதிலளித்தார்.


Advertisement

Advertisement