• Jul 26 2025

நான் ரெடி.... விஜய் ரெடியா? 15 வருட பிரச்சனை குறித்து பேசிய நெப்போலியன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

போக்கிரி பட சமயத்தில் ஏற்பட்ட சண்டைக்கு பின் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்காமல் இருந்து வரும் நெப்போலியன், சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து பேசியுள்ளார்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். மேலும் இவர் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு ஐடி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் யூடியூபர் இர்பான் அவரது வீட்டுக்கு சென்று அவரது வீட்டை வீடியோ எடுத்து பதிவேற்றி இருந்தார்.எனினும் அப்போது நெப்போலியன் தனது மாற்றுத்திறனாளி மகனுக்காக வீட்டில் என்னென்ன மாற்றம் செய்துள்ளார் என்பதை பார்த்து அனைவரும் வியந்து போயினர். அத்தோடு அந்த வீடியோவும் மிகப்பெரிய அளவில் வைரலானது.


மேலும் அந்த வீடியோ வைரலானதற்கு பின் பல்வேறு பேட்டிகளைக் கொடுத்து வருகிறார் நெப்போலியன். அந்த வகையில் சமீபத்திய பேட்டியொன்றில் போக்கிரி பட சமயத்தில் ஏற்பட்ட சண்டைக்கு பின்னர் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்காமல் இருந்து வரும் நெப்போலியன், வாய்ப்பு வந்தால் மீண்டும் சேர்ந்து நடிப்பாரா என கேள்வி கேட்கப்பட்டது. எனினும் இதற்கு நெப்போலியன் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

நெப்போலியன் கூறியதாவது : “போக்கிரி படத்தின் போது ஒரு சம்பவம் நடந்தது. அதற்கு பின் நானும் விஜய்யும் பேசிக்கொள்வதில்லை. அதனால் அவரது படங்கள் எதுவும் நான் பார்ப்பதில்லை. விஜய் ரெடினா... அவரோடு எப்போ வேண்டுமானாலும் பேச நான் ரெடி. அவருடன் இணைந்து நடிக்க நான் ரெடி... விஜய் அதற்கு ரெடியானு அவர்கிட்ட தான் கேட்கனும். ஏன்னே அவர் பெற்ற தாய், தகப்பனிடமே பேசாமல் இருக்கிறாரே.


அத்தோடு இன்றைக்கு ஊர், உலகமெல்லாம் அதைப்பற்றி தான் பேசுகிறது. அது உண்மையா, பொய்யானு கூட எனக்கு தெரியாது. ஆனா அமெரிக்கா வரைக்கு அந்த செய்தி வந்திருக்கு. முதலில் அவர் தாய், தகப்பனுடன் சமரசம் ஆகட்டும். அதன்பின் யோசிப்போம். எனக்கு விஜய்க்கு ஏற்பட்ட மோதல் நடந்து 15 வருஷம் ஆகிவிட்டது.அத்தோடு  இவ்ளோ நாள் இடைவெளிக்கு பின் விஜய் என்னுடன் பேச தயாராக இருப்பாரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் பேச நான் ரெடி” என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement