• Jul 25 2025

எனக்கு ஆலியாவை விட இத்தனை வயது அதிகம்... உண்மைகள் பலவற்றை உடைத்த ரிஷி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான “டீலா நோ டீலா” நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் தான்  ரிஷி.மேலும் இவர் தொகுப்பாளர் மட்டுமல்ல வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகரும் ஆவர். அசோகவனம், பத்மகலி, இது ஒரு காதல் கதை போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் தொடக்கம், ஆனந்த தாண்டவன், நான் சிகப்பு மனிதன், யான் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது இவர் “இனியா” சீரியலில் எதிரிமறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக சென்று கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தான் பிரபல செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார் ரிஷி. அவர் பேச ஆரம்பித்ததில் தன்னுடைய தமிழ் உச்சரிப்பு பிடித்திருக்கிறது என்று பலரும் கூறுவார்கள். அதற்க்கு காரணம் என்னுடைய அம்மாதான். அவர் தான் எந்த மொழி கற்றுக்கொண்டாலும் தெளிவாக திருத்தமாக பேசவேண்டும் என சொல்லுவார். இவரது தாய் குஜராத்தி என்பது குறிப்பிடதக்கது. அத்தோடு இவரது அப்பா ஈ.வெ.ராவுடன் பணியாற்றியிருக்கிறார்.


அத்தோடு இவர் தன்னுடய 19, 20 வயதுகளில் இருந்தே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் தனக்கு “நினைத்தலே இனிக்கும்” சிரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ஹெட் ராமன் அவர்களுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன் எனக்கூறினார். மேலும் பல வருடங்கள் ரமணன் நட்பு இருந்ததால் மீண்டும் சிரியலில் நடிக்க தோன்றிய போது ரமணன் அவர்களிடம் ரிஷி சென்று கேட்டிருக்கிறார். “நினைத்தாலே இனிக்கும்” சீரியலில் ரிஷி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மேலும் பெங்காலில் ரீமேக் சிரியலான “சேதுபதி” சிரியலில் நடக்க இவர்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் பின்னர் இனியா சீரியல் பற்றி பேசிய அவர் `ஆரம்பத்தில் எதிர்மறை கதாபாத்திரம் என்பதினால் என்ன செய்ய போகிறேன் என்று முதலில் முடிவு செய்தேன், இயக்குனர் அந்த கதாபாதிரத்தை பற்றி தெளிவாக எழுதி கொடுத்ததால் சுலபமாக இருந்ததாக கூறினார்.அத்தோடு இனியா சீரியலில் பணியாற்றும் அனைவருடைய கூட்டு முயற்சியால் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு நன்றி சொல்கிறேன் என்று கூறினார்.

இனியா சிரியலில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி தெரிவிக்கையில் `சீரியலில் தொடக்கத்தில் அம்மா வைக்கும் பொங்கலில் கல் இருப்பதினால் நான் அதிக கற்களை பொங்கலில் போட்டு அவரை சாப்பிட சொல்வேன். இதனால் எனக்கு தொடக்கத்தில் இருந்தே ட்ரோல்கள் வர ஆரம்பித்தன. மேலும் நான் நடிகை ஆல்யாவை விட 10 வயது பெரியவன், அதோடு அவருக்கு 2 குழந்தைகள் இருக்கிறது. இதனை மக்கள் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அப்போது தான் சீரியலின் கதை மேலே ரசிகர்களுக்கு ஆர்வம் வரும் என்று கூறினார் நடிகர் ரிஷி.

Advertisement

Advertisement